Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மதுபோதையில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:03 IST)

Widgets Magazine

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலி காட் எனும் வனப்பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா தளத்தில், இரண்டு வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோலாப்பூரை சேர்ந்த 7 நண்பர்கள் சமீபத்தில் அம்போலி காட் எனும் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த மலைப்பகுதி 2 ஆயிரம் அடி உயரமுள்ளது. அதில், இம்ரான் காடி மற்றும் பிரதாப் ஆகிய இரண்டு பேர் மது அருந்திய நிலையில், அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் நீர் நிறைந்த குளமும், மறுபுறமும் 2 ஆயிரம் அடி பள்ளமும் இருந்தது.
 
மது போதையில் இருந்த அவர்கள், தடுப்பின் மீது ஏறி, பள்ளத்தாக்கு பகுதியில் நின்றனர். இதனை அவரின் நண்பர்களில் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் மதுபோதையில் தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து விட்டனர். அதைக் கண்ட அவர்களின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இருவரும் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பொறுமையின் எல்லையில் சீனா; ராணுவத்துடன் தயார் நிலையில் இந்தியா

சிக்கிம் விவகாரத்தில், எங்களின் பொறுமை இறுதி நிலையில் உள்ளது என சீன பாதுகாப்புத்துறை ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை வருமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என ...

news

மாணவிகளை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியை: இப்படியொரு ஒரு தண்டனையா!

மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகளை ஆசிரியை ஒருவர் நிர்வாணமாக நிற்கவைத்து தண்டனை கொடுத்த ...

news

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய ...

Widgets Magazine Widgets Magazine