வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (12:09 IST)

பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்து பதுக்கல்: பிரபல நடிகையின் கணவருக்கு தொடர்பு?

பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்து பதுக்கல்: பிரபல நடிகையின் கணவருக்கு தொடர்பு?

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகிலுள்ள கோலாப்பூர் என்ற இடத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒரு மருந்து தயாரிப்பு குடோனில் சோதனை நடத்தினர். 


 

 
இந்த சோதனையில், குடோனில் மருந்து பொருட்களுக்கு இடையில் போதை பொருளும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த மருந்துகளை ஆய்வு செய்தனர். இதில், 21 டன் எடையுள்ள கொடிய போதை மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
 
அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
 
இந்நிலையில், நைஜீரிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை மம்தா குல்கர்னியின் கணவரான கென் பாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமிக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 
இந்த கடத்தலில் தொடர்புடைய  மேலும் 4 பேர் தலை மறைவாக இருப்பதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், கைதானவர்களிடம் விசாரணை நடத்த அமலாக் கப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இந்த விசாரணைக்குப் பின்னர் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.
 
இதே போல் மமதா குல்கர்னியின் கணவர் போதை மருந்து கடத்தல் குற்றத்திற்காக கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யபட்டு பின்ன்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.  
 
இது குறித்து நடிகை மம்தா குல்கர்னி தற்போது கூறியிருப்பதாவது:-
 
தனது கணவர் குடும்ப பிரச்சினை காரணமாக கைது செய்யபட்டார். பின்னர் 2 மாதங்களில் அவர் விடுதலை செய்யபட்டார்.
 
விக்கி சிறைக்கு சென்றது செய்தியானது. இப்போது சொல்கிறேன் அவர் 2 மாதத்தில் வெளியே வந்து விட்டார்.
 
அவரது கைதுக்கு காரணம் போதை மருந்து கடத்தல் என கூறப்பட்டது அது உண்மையில்லை மாறாக அது குடும்ப தகராறாக இருந்தது. ஆனால் இதில் விக்கி இழுக்கபட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது எனப்து குறிப்பிடத்தக்கது.