வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 1 நவம்பர் 2014 (16:21 IST)

கவிழ்ந்த 'சரக்கு' லாரி; கொண்டாடிய 'குடிமகன்கள்'

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் பிரபலமான பீர் பாட்டில்கள் அடங்கிய லாரி திடீரென தலை குப்புற கவிழ்ந்ததில் பாட்டில்கள் உடைந்து நொறுங்கின.
 
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லி செல்லும் சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரிக்கு எதிரே சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திருப்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையிலிருந்து விலகி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட டிரைவர் மற்றும் அவரது சகோதரரையும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டனர்.
 

 
அதன் பிறகு, லாரி கவிழ்ந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் லாரி இருக்கும் பகுதிக்கு விரைந்த வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த வாளி, குவளைகள், மற்றும்  இதரவற்றில் பீர் பாட்டில்களையும், சரக்குகளையும் எடுத்து கொண்டு சென்றனர். சிலர் அங்கேயே பீர் பாட்டில்களை குடிக்கவும் செய்தனர்.
 
விபத்து நடந்து நீண்ட நேரம் ஆகியும் காவல்துறையினர் வராததால் குடிமகன்களுக்கு மேலும் வசதியாக போய்விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் நேற்று மது விருந்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.