செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (14:18 IST)

தாத்ரி சம்பவத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்:ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் பசுமாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.


 
 
உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் பசுமாட்டு இறைச்சியை சாப்பிட்டதாகக் கூறி அக்லாப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
 
கொல்லப்பட்ட  அக்லாப்பின் குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் தாத்ரி சம்பவத்தில் மதச்சாயம் பூச வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "”தாத்ரி படுகொலை எதிர்பாராத சம்பவம் என்றும், அதனை அரசியலாக்கவோ, மதச்சாயம் பூசவோ முயற்சிக்க கூடாது எனவும்” தெரிவித்துள்ளார்.