வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:44 IST)

’அதிர்ச்சி’ - கன்னடர்களின் அட்டூழியத்திற்கு துணைப்போகும் காவல்துறை!

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதால், கர்நாடக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


 
 
இந்நிலையில், அம்மாநிலத்தில், தமிழகத்தை சேர்ந்த பேருந்து உரிமையாளர் வைத்திருக்கும் கேபிஎன் டிராவல்ஸின் 35 பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் மிகவும் நிதானமாகதான் வந்ததாக கூறுகின்றனர். 
 
இது குறித்து கேபிஎன் டிராவல் மேலாளர், கூறியதாவது, “ டிப்போவில் நிறுத்தி வைத்திருந்த பேருந்துக்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும், 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். அதற்குள் அனைத்து பேருந்துகளும் எரிந்து நாசமாகவிட்டது. எரிந்த பேருந்துகளின் விலை ரூ.35 கோடிக்கும் அதிகமானது.” என்றார். 
 
பேருந்துகள் எரிக்கப்பட்டபோது, 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் காவல்துறையினரின் இந்த செயல் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில், தமிழர்களின், அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.