1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sugapriya
Last Updated : திங்கள், 4 ஜூலை 2016 (15:37 IST)

12 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன மூக்கை திரும்ப பெற்ற சிறுவன்

ஒரு மாத குழந்தையின் போது அருண் பட்டேல் என்பவருக்கு மருத்துவ விளைவால் காணாமல் போன மூக்கை  தற்போது 12 வயதில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை  மூலம் திரும்ப பொருத்தினார்கள்.  


 

 
இந்தூரில் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு அரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். சிறுவனது நெற்றியில் மூக்கை மறுகட்டமைப்பு செய்து பின்னர், அதை அவரது முகத்தில் மூக்கு இருக்கும் அசல் இடத்தில் அதை பதிய வைத்திருக்கிறார்கள்.
 
உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அருண் படேல் ஒரு மாத குழந்தையாக இருந்த போது தவறாக செலுத்தப்பட்ட ஊசியின் பக்க விளைவின் காரணமாக அவரது மூக்கு காணாமல் போய்விட்டது. எனவே இழந்த மூக்கை திரும்பி பெற அவரது நெற்றியில் மூக்கின் வடிவம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, அதன் பின்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் வாயிலாக மூக்கு அதன் சரியான இடத்தில் பொருத்தப்பட்டது.
 
சிறுவனுக்கு அரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை செய்த டாக்டர் தாஸ், இந்த அறுவை சிகிச்சையில் ஒரு தனிப்பட்ட முறையை கையாண்டதாகவும், அவர்கள் முதலில் சிறுவனின் நெற்றியில்  மூக்கு புனரமைக்கப்பட்ட பின்னர் அவரது முகத்தில் அதன் சரியான இடத்தில் பொருத்தப்படதாகவும்,இந்த அறுவை சிகிச்சை நான்கு கட்டங்களாக நிகழ்த்தப்பட்டதாவும், ஒரு வருடம் எடுத்து கொண்டதாகவும், அந்த சிகிச்சை தற்போது சமீபத்தில் தான் நிறைவு பெற்றது என்று கூறினார்.