வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (05:41 IST)

மவுனம் கலையுங்க மோடி: போட்டுத் தாக்கிய கெஜ்ரிவால்

உத்தரபிரதேசத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்ட முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட சம்பவத்தில், பிரமதர் நரேந்திர மோடி மவுனம் கலைக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
உத்தரபிரதேசத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்ட முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட சம்பவம், நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் குடும்பத்தினருக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
 
இதனையடுத்து, இந்த சந்திப்பு குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  உத்தரபிரதேசத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்ட முஸ்லீம் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட சம்பவத்தால்  நாட்டிற்கே பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த படுகொலை விவகாரத்தில், மத்திய அரசும், மாநில அரசும் கூட்டணி அமைத்து கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும்.
 
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனம் இச்சம்பவத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.