செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (08:10 IST)

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 1 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றப்பட்டன.
 
அதன்படி  பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாயாகவும், டீசலின் விலை லிட்டருக்கு 50 பைசாக்களாகவும் குறைக்கப்பட்டன.
 
இந்நிலையில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 50 அமெரிக்க டாலராக குறைந்தது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மேலும் குறைக்க முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.