வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (12:00 IST)

மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் வழங்கக் கூடாது - வெங்கைய்யா நாயுடு

மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் வழங்கக் கூடாது என்று வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
 
திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்யா நாயுடு, " அரசு மற்றும் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நாட்டில் ரூ.45 லட்சம் கோடி மதிப்பில் 100 நவீன மாதிரி நகரம் உருவாக்கப்படும்.
 
மேலும் 500 பெருநகரம் அமைக்கப்படும். சரித்திர புகழ் பெற்ற நகரங்கள் மேம்படுத்தப்படும். இதுகுறித்து ஆலோசிக்க அடுத்த மாதம் மாநகராட்சி மேயர் மற்றும் நகரசபை தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும். நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுகிறது.
 
மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் கொடுக்க கூடாது. மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக அதனை இலவசமாக கொடுத்தால் பிற்காலத்தில் இல்லாமல் போய் விடும். வரிகள் போட்டால்தான் வளர்ச்சி பணிகளை செய்ய முடியும்.