Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகிறார்...


Murugan| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:50 IST)
கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் மேனேஜர் அப்புண்ணி அப்ரூவர் ஆகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 

 
திலீப்பின் மனசாட்சியாகவும், வலது கரமாகவும் செயல்பட்டவர் அவரின் மேனேஜர் அப்புண்ணி. இவர் மூலமாகவே பல காரியங்களை செய்துள்ளார் திலீப். திலீப்பிடம் யாரும் பேச வேண்டுமானால் அப்புண்ணியைத்தான் தொடர்பு கொள்வார்கள்.
 
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திலீப்போடு சேர்த்து இவரையும் கைது செய்த கேரள போலீசார், இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் “ திலீப் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்ட போது, என்னை அவர் தலைமறைவாக கூறினார். முக்கிய குற்றவாளி பல்சர் சுனிலோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு” எனக் கூறியுள்ளார். மேலும், போலீசாருக்கு தேவையான பல முக்கிய தகவல்களை அவர் வாக்குமூலத்தில் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த வழக்கில் அவர் அப்ரூவர் ஆக போலீசாரிடம் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதன் மூலம் திலீப்பிற்கு எதிரான பல வலுவான ஆதரங்களை போலீசார் திரட்டி, நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள் எனவும் தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :