Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிஐஜி ரூபா பணியிட மாற்றம்: பழிவாங்கிய கர்நாடக அரசு!

டிஐஜி ரூபா பணியிட மாற்றம்: பழிவாங்கிய கர்நாடக அரசு!

திங்கள், 17 ஜூலை 2017 (13:19 IST)

Widgets Magazine

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக டிஜிபிக்கு அறிக்கை அளித்து பரபரப்பை ஏற்படுத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
 
இந்நிலையில் அவர் போலீஸ் மற்று சிறைத்துறை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக கூறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டார் ரூபா. இவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
 
மேலும் இது தொடர்பாக அடிக்கடி ரூபா ஊடகங்களையும் சந்தித்து விளக்கம் அளித்தார். இதனால் இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
 
ஆனாலும் ரூபா தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக மீண்டும் ஊடகங்களை சந்தித்தார். இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு அதற்கான குழுவையும் அமைத்தார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அதே நேரத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக டிஐஜி ரூபா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்க வேண்டும்.
 
ஆனால் அதற்கு முன்னரே ரூபா ஊடகங்களில் பேசியது தவறானது. அவர் அடிக்கடி மீடியாவை சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ரூபா பேட்டி கொடுத்தது விதிமுறை மீறிய செயலாகும். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதா என்பதை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு தனது விசாரணையை இன்று ஆரம்பிக்க உள்ள நிலையில் அவரை கர்நாடக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக உள்ள ரூபாவை பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக மாற்றம் செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி சத்திய நாராயணராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

13வயது சிறுமியை அயர்ன் பாக்ஸால் சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர் கைது

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமயை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அய்ர்ன் ...

news

தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியை முடிவு செய்த மோடி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்கூட்டியே ...

news

சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்? - கர்நாடக அரசு தீவிர ஆலோசனை

பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, வேறு சிறைக்கு மாற்றுவது ...

news

எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சி

அருணாச்சல் பிரதேச எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

Widgets Magazine Widgets Magazine