வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (08:49 IST)

டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது, பெட்ரோல் விலை குறைப்பு

டீசல் விலை லிட்டருக்கு 50 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.51 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையின்படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.1.92 குறைந்து, ரூ.71.55க்கு விற்கப்படுகிறது. டெல்லியில், வரியுடன் சேர்த்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைந்து, ரூ.68.51 க்கு விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் ரூ.76.14க்கும், மும்பையில் ரூ.76.41க்கும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை கடந்த 1 ஆம் தேதி, லிட்டருக்கு ரூ.1.09 ம், அதைத் தொடர்ந்து மீண்டும் ரூ.2.18 ம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ரூ. 19 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மொத்தமாக வாங்கப்படும் டீசலின் விலையும் லிட்டருக்கு ரூ.1.32 குறைக்கப்பட்டுள்ளது.

இது ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. டீசலின் விலை, மாதந்தோறும் உயர்த்தப்படுவது போன்று இம்முறையும் லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.