வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 நவம்பர் 2014 (12:22 IST)

பொறியாளரின் வீட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் பறிமுதல்

உத்திரப் பிரதேசத்தில் வரிமான வரியினர் நடத்திய சோதனையில், பொறியாளரின் வீட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது, உள்கட்டமைப்புகளின் தலைமைப் பொறியியலாளராக பணியாற்றிவர் யாதவ் சிங். 2012ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து யாதவ் சிங் நீக்கப்பட்டார்.
 
நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் திட்டங்களில் 954 கோடிக்கு ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதில், யாதவ் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளதால், அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
 
இந்நிலையில் நொய்டாவில் உள்ள யாதவ் சிங்கின் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது படுக்கையறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களும், 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
 
மேலும், அவருடையக் காருக்குள் 12 கோடி ரூபாய் அளவிலான 8 பணப்பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.