1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (06:04 IST)

துணை பதிவாளர் அனுப் சுரேந்திரநாத் ராஜினாமா விவகாரம்: உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்ற துணை பதிவாளர்  அனுப் சுரேந்திரநாத் ராஜினாமா விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சில விளக்கங்களை தெரிவித்துள்ளது.
 

 
கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30 ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட முடிவு செய்யப்பட்டது.
 
இந்த உத்தரவுக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வு அயாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
 
இந்நிலையில், யாகூப் மேமனின் வழக்கிறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவர்களது இல்லத்தில் ஜூலை 29 ஆம் தேதி நள்ளிரவில் சந்தித்து, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை 14 நாட்கள் நிறுத்திவைக்கக் கோரி மனு கொடுத்தனர். இந்த மனு மீதான பரிசீலனை, சுப்ரீம் கோர்ட் எண் 4 ல் வைத்து விசாரணை நடைபெற்றது.
 
அப்போது, வாதிட்ட அரசு வக்கீல் முகுல் ரோகித்கி, சட்டத்தில் உள்ள சாதக வழிகளை பயன்படுத்தி நேர்மையற்ற தண்டனையை இழுத்தடிக்க முயல்வதாகவும், மேலும், சிறையிலேயே இருக்க மேமன் முயற்சி செய்வதாகவும் வாதிட்டார். இரதரப்பு வாதத்ததையும் கேட்டறிந்த 3 பேர் கொண்டபெஞ்ச், மேமனின் புதிய மனுவை நிராகரித்தனர்.
 
இதையடுத்து, மேமனின் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு நாக்பூர் சிறையில் மேமன் துாக்கிலிடப்பட்டார்.
 
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரவு என பாராமல் விடிய விடிய வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு, இந்தியா முழுமைக்கும் கடும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து, உச்ச நீதி மன்ற துணை பதிவாளர் அனுப் சுரேந்திர நாத்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
 
இது குறித்து,  உச்ச நீதிமன்ற செயலாளர் வி.எஸ்.ஆர். அவதானி கூறுகையில், 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் வழக்கு காரணமாக, உச்ச நீதிமன்ற துணை பதிவாளர் அனுப் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது.
 
குறிப்பாக, துணை பதிவாளர் அனுப் சுரேந்திரநாத் தனது விருப்பத்தின் பேரிலேயே, அவர் ஏற்கனவே, பணியாற்றிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காக சென்றுள்ளார் என்றார்.