வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (16:55 IST)

அச்சுறுத்தும் சிக்கன்குனியா: கொசு பிடியில் 12 ஆயிரம் பேர்

நாடு முழுவதும் சிக்கன்குன்யா தாக்கப்பட்டு 12 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
நாட்டின் தலைநகர் டெல்லியில் சிக்கன்குன்யா பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாட்டில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அதோடு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவாட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பட்ரவி வருவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது போல் வட மாநிலங்களில் சிக்கன்குன்யா பரவி வருகிறது. டெல்லியில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா காய்ச்சல் பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 
 
இதற்கு பாஜக, காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாவிடால் ராஜினாமா செய்யுங்கள் என்று கெஜிரிவாலை வலியுறுத்து உள்ளது.