வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 4 மே 2015 (14:06 IST)

பெண்ணுடன் தகாத உறவு கொண்டதாக புகார்: ஆம் ஆத்மி தலைவர் குமார் விஷ்வாசுக்கு நோட்டீஸ்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குமார் விஷ்வாஸ். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இவர் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மியின் பெண் தொண்டர் ஒருவருக்கும், குமார் விஷ்வாசுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் நாடாளுமன்ற தேர்தலின்போது தன்னுடன்  தகாத உறவு வைத்து கொண்டதாக ஒரு பெண் டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பெண்கள் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இதேபோல் அஜய்வஹ்ரா என்பவரும் டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண், டெல்லி பெண்கள் ஆணையம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் கமிஷனுருக்கும் புகார் கொடுத்துள்ளார் என பெண்கள் ஆணையத் தலைவர் பர்கத் சுக்லா சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது நாங்கள் இது தொடர்பாக குமார் விஷ்வாசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை ) ஆஜராவார் எனக் கூறினார்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை குமார் விஷ்வாஸ் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியுள்ளன. குமார் விஷ்வாஸ் அந்தப் பெண்ணிடம் கண்ணிய குறைவாக நடந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஆம் ஆத்மி கட்சி  பிரமுகரும் தற்போதைய பாஜகவை சேர்ந்தவருமான ஷசியா இல்மி கூறியுள்ளார்.