வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (14:57 IST)

டெல்லியில் 37 நாட்களாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்

வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக தலைநகர் டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த விவசாயிகளின் போராட்டம் சற்று  முன்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.




 


தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 5 முறை விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி கூறியதால் வாபஸ் பெறப்படுவதாக கூறியபோதிலும் போராட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று மாலை டெல்லியில் விவசாயிகளை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவுள்ளதாகவும், இதுகுறித்த விபரங்களை விரைவில் கடிதம் மூலம் தான் தெரிவிப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கொடுத்த வாக்குறுதியில் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அய்யாக்கண்ணு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.