Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிடிவி தினகரனுக்கு குரல் சோதனை நடத்த உத்தரவு!

டிடிவி தினகரனுக்கு குரல் சோதனை நடத்த உத்தரவு!

வியாழன், 18 மே 2017 (17:13 IST)

Widgets Magazine

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது குரல் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 
 
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முனபணமாக 1.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. முன்பணம் 1.30 கோடி ரூபாய் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேசிய செல்போன் உரையாடல் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இருவரின் குரலையும் சோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
 
இந்த கோரிக்கை மீதான விசாரணை கடந்த 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தினகரன் மற்றும், சுகேஷ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குரல் சோதனைக்கு தினகரன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
முன்கூட்டியே கருத்து கேட்காமல் இந்த குரல் சோதனை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த சோதனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
 
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு மீதான விசாரணையின் போது டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய காவல்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினியை தீபாவின் கணவருடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் ராதாரவி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் ...

news

குல்பூசன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

குல்பூசன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை ...

news

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் நிலவி வருகிறது. ...

news

ரஜினிகாந்த் மண்டையில் எதுவுமே இல்லை?: மார்கண்டேய கட்ஜூ சர்ச்சை கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மண்டையில் எதுவுமே இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

Widgets Magazine Widgets Magazine