வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (12:54 IST)

நாகரிக சமுதாயத்தில் தூக்கு தண்டனையை ஏற்க முடியாது - பாஜக எம்.பி. வருண் காந்தி

நாகரிக சமுதாயத்தில் தூக்கு தண்டனையை ஏற்க முடியாது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
 

 
1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக கருதப்பட்ட யாகூப் மேமன் வியாழக்கிழமை [30-07-15] அன்று அதிகாலை நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் அரசியல் கட்சிகளும், சமூக ஆரவலர்களும், நீதிபதிகளும் கூட தூக்கு தண்டனை குறித்து விமர்சனம் செய்து வருகின்றன.
 
இந்நிலையில், இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி ஆங்கில இதழ் ஒன்றிற்கு எழுதியுள்ள கட்டுரையில், ”தூக்கு தண்டனை மட்டுமே சட்டத்தின் முன்பு தீர்வாக அமையாது. சட்டத்திற்கு அப்பால், இது ஒரு மனித உரிமை பிரச்சனை.
 
மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தூக்கு தண்டனை என்பது முரண்பாடாக உள்ளது. இதில் திருத்தங்கள் தேவைப்படுகிறது. சிலருடைய வாழக்கை மரணத்திற்கு தகுதியுடையாத இருக்கிறது. சிலருடைய மரனம் வாழ்வதற்கு தகுதியுடையதாக இருக்கிறது.
 
நாகரிக சமுதாயத்தில் தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. தண்டனை விவகாரத்தில், தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களுக்கேற்ப, நம்முடைய சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் முன்பாக ஏழைகள்தான் தொடர்சியாக சிக்குகின்றனர். மேலும் சிறுபான்மையினரும் இந்த கொடிய தண்டனைக்கு ஆளாகின்றனர்” என்று அதில் கூறியுள்ளார்.
 
இதற்கு முன்னதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “இந்தியாவில் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் எனச் சிலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். எனவே, இந்தியாவில் தண்டனையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருந்தது கூறிப்பிடத்தக்கது.