1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (08:57 IST)

டியர் ஸ்மிரிதி இராணி: கொந்தளித்த மத்திய அமைச்சர்!

தன்னை டியர் என்ற வார்த்தையால் கூப்பிடக்கூடாது என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி டிவிட்டரில் கடுமையாக கூறியுள்ளார்.


 
 
டியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் டுவிட்டரில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கும், பீகார் கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரிக்கும் இடையே ஒரு கலவரமே நடந்தது.

 
டியர் ஸ்மிரிதி இராணி நாம் எப்போது புதிய கல்விக் கொள்கையை பெற உள்ளோம்?. உங்களுடைய காலண்டரில் 2015 எப்போது முடிகிறது? என பீகார் கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரி டுவிட்ட்டரில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் கேட்டார்.

 
டியர் என்ற வார்த்தையை பயன்படுத்துவது எனக்கு சரியாகபடவில்லை. எந்த பெண்ணையும் டியர் என்று அழைப்பது சரியல்ல என ஸ்மிரிதி இராணி பதில் டுவீட் செய்தார்.

 
இதற்கு பதில் அளித்த சவுத்ரி டியர் என்று அழைப்பது மரியாதை குறைவு கிடையாது, பணி ரீதியிலான இமெயில் என்பதால் அப்படி தொடங்கி இருந்தேன் என்றார்.

 
அதற்கு பதில் அளித்த ஸ்மிரிதி இராணி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல்தொடர்புகள் அனைத்தும் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்’’ என பதில் அளித்திருந்தார்.
 
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியும், பீகார் கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரியும் டுவிட்டரில் மோதிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.