வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (14:49 IST)

தலித் பிரச்சனையால் தந்தை பலி, மகன் படுகாயம்: அச்சத்தில் கிராம மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தலித் பிரச்சனையால் 55 வயது முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மகன் மிக கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.


 
 
நேற்று முன்தினம் உயர் ஜாதி மர்ம கும்பலால் தந்தை மகன் தக்கப்பட்ட சம்பவத்தால், அந்த கிராமம் அச்சத்தில் உள்ளது. இதனால் அங்கு நிலவி வரும் அச்சம் காரணாமாக முன்னெச்சரிக்கை நடவடிகையாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
நேற்று முந்தினம் ஜெகதீஸ் என்னும் 55 வயது முதியவரும் அவரது மகன் 20 வயதான தாமேந்திராவும் ஊருக்கு வெளியே ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இதில் ஜெகதீஸ் மரணமடைந்தார். அவரது மகன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குர்ஜர் மற்றும் தலித் ஜாதியினரிடையே நிலவி வந்த பழைய பகை காரணமாக நிகழ்ந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
இதனை தொடர்ந்து கிராம மக்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கலைக்க காவல் துறை லேசான வான்வழி துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர்.
 
தாங்கள் கிராமத்தில் உள்ள வசதியானவர்களால் தாக்கப்படுவதாகவும், அவர்கள் குர்ஜர் ஜாதியினரை சார்ந்தவர்கள் என தலித் சமூக உறுப்பினர்கள் கூறினர். அவர்களால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் காவல் தூறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.