வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2016 (12:12 IST)

தாழ்த்தப்பட்டவனாக இருப்பதால் பழிவாங்கபடுகிறேன்: ராஜஸ்தான் கூடுதல் தலைமை செயலாளர்

ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமை செயலாளராக உள்ள உம்ரோ சலோடியா, தான் தாழ்த்தப்பட்டவனாக இருப்பதால் பழிவாங்கபடுகிறேன் என்று கூறியுள்ளார்.


 

 
ராஜஸ்தான் மாநிலத்தின்  மாநில சாலை போக்குவரத்து கழக தலைவர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் உம்ரோ சலோடியா.
 
ஐஏஎஸ் அதிகாரியான உம்ரோ சலோடியா தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு பதவிகால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என மாநில தலைமை செயலாளர் சி.எஸ்.ராஜனுக்கு எதிராக  போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
இது குறித்து உம்ரோ சலோடியா கூறியதாவது:-
 
நான் ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து கழக தலைவர் மற்றும் கூடுதல் தலைவராக  கடந்த் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
 
நான் தலைமை செயலாளர் பதவிக்கு தகுதி உள்ளவன். ஆனால்  தற்போதைய தலைமை செயலாளருக்கு மாநில அரசால் 3 மாதம்  பதவி காலம் நீட்டிப்பு வழங்கபட்டுள்ளது.
 
நான் எனது ஜூனியருக்கு கீழ் பணியாற்ற முடியாது. எனக்கு தலைமை செயலாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்ப்படும் என எதிர்பார்த்தேன்.
 
ஆனால், தற்போது நான் பாதிக்கபட்டதாக உணர்ந்துள்ளேன்.நான் தாழ்த்தபட்டவன் என்ற மன நிலை நிலவுகிறது. இதை தொடர்ந்து நான் விருப்ப ஓய்வுபெற விண்ணப்பித்துள்ளேன்.
 
எனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தின் மீது 3 மாத போராட்ட கடிதத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது ஓய்வு காலம் ஜூன 2016 ஆகும்.
 
நான் இந்து மற்றும் தாழ்த்தப்பட்டவனாக இருப்பதால் பழிவாங்கபட்டுள்ளேன். தற்போது நான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். பள்ளிவாசலுக்கு சென்று நான் கலிமா கூறியுள்ளேன்.
 
பழிவாங்க பட்டவன் என்ற நிலையில் நான் போராடுவதால் நிம்மதியடைகிறேன். தனது பெயர் உம்ரோ கான் என அழைக்கப்படுகிறேன். இவ்வாறு உம்ராவ் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், உம்ராவ்  தற்போது இந்து மதத்திற்கு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.  அவர் இன்று தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுதலுக்காக விண்ணபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.