தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்.. ரயிலை கவிழ்க்க சதி வேலையா? பெரும் பரபரப்பு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் இருந்த நிலையில் சரக்கு ரயிலை கவிழ்க்க சதி வேலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெந்தரோ என்ற ரயில்வே ஸ்டேஷன் அருகே காலி கேஸ் சிலிண்டர் இருந்த நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில், டிரைவர் பார்த்ததும் உடனடியாக பிரேக் அடித்து ரயிலை நிறுத்தினார்.
அதன் பின்னர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த ரயில்வே அதிகாரிகள் சிலிண்டர் முற்றிலும் காலியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த காலி சிலிண்டர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. காலி சிலிண்டரை வைத்தது யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran