வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (09:08 IST)

ஓகி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள்

நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை துவம்சம் செய்த ஓகி புயல் இன்று திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் இனி புயல் அபாயம் இல்லை என்றும் இருப்பினும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்த புயல் மற்றும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊத்துமடம் பகுதியில் 4 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதால் அவர்களுக்கு உதவ மீட்புக்குழுவினர் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஓகி புயல் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை கடப்பதால் திருவனந்தபுரம் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:


 Train No 56310 Nagercoil-Trivandrum Passenger cancelled on 01.12.2017

 Train No 56386  Kottayam-Ernakulam Passenger cancelled on 01.12.2017

 Train No 56362 Ernakulam-Nilambur Passenger cancelled on  01.12.2017

 Train No 56363 Nilambur-Ernakulam Passenger cancelled on 01.12.2017

 Train No 56389 Ernakulam-Kottayam Passenger cancelled on 01.12.2017

 Train No 16791 Punalur-Palakkad Palaruvi Express cancelled on 01.12.2017

 Train No 16792 Palakkad-Punalur Palaruvi Express cancelled on 01.12.2017

 Train No 56305 Kottayam-Kollam Passenger cancelled on 02.12.2017

 Train No 56334 Kollam-Punalur Passenger cancelled on 02.12.2017

 Train No 56333 Punalur-Kollam Passenger cancelled on 02.12.2017

 Train No 56309 Kollam-Trivandrum Passenger cancelled on 02.12.2017

 Train No 56313 Trivandrum-Nagercoil Paseenger cancelled on 02.12.2017

 Train No 56715 Punalur-Kanniyakumari Passenger cancelled on 02.12.2017