1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (20:12 IST)

ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 4 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பொதுக்கூட்டத்திற்காக கர்நாடகவில் 4 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் சுவானில், காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலிருந்து  ஹெலிகாப்டரில் பயணம் செய்து இந்த பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

இந்த கூட்டத்திற்காக ராணிபென்னூர் கிராமத்தில் உள்ள 4 ஏக்கர்  விவசாய நிலத்தை அழிக்கப்பட்டு உள்ளது. அந்த நிலத்தில் மக்காச்சோள பயிர்கள் விரைவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து என்றும். இன்னும் 15 நாட்கள் கழிந்தால் மக்காச்சோளம் விளைந்துவிடும் என்ற நிலையில் அப்பகுதி காங்கிரஸ் கட்சிகார்களால் அவை அழிக்கப்பட்டு உள்ளது.

இது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிர்கள் அனைத்தும் ஒரே விவசாயிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக வரலாற்றாசிரியரான ராமச்சந்திரா குகா வெளியிட்டு உள்ள டுவிட்டர் தகவலில், “காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்துவிட்டு செல்ல, மேடை அமைப்பதற்கு விவசாயி விலைமதிப்புமிக்க பொருட்களை இழந்து உள்ளார்,” என்று தெரிவித்து உள்ளார். 
 
கர்நாடக மாநிலத்திலும் போதிய மழை இல்லாத காரணத்தால் சில பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் இச்சமபவம் விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.