வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (05:36 IST)

ஸ்ரீசாந்த் மீதான தடையை உடனே நீக்க வேண்டும்: கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கோரிக்கை

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோர் மீது பரபரப்பு புகார் எழுந்தது.
 
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த வாரம் விடுதலை செய்தது.
 
இதனால், ஸ்ரீசாந்த் மீதான ஆயுள்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தது. 
 
இதனையடுத்து, இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை  அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறுகையில், ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பை மதித்து, ஸ்ரீசாந்த் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்றார்.