கணவனைப் பிரிந்தாலும் மாமியார் வீட்டில் வாழலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:16 IST)

ஒரு பெண் கணவனைப் பிரிய விவாகரத்துக் கோரினாலும் அவர் தன் மாமியார் வீட்டில் வாழ உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கணவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்திருந்தாலும் கணவரின் குடும்ப வீட்டில் வாழ உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த வீடு கணவரின் பெயரில் இல்லாமல் அவரது பெற்றோர் பெயரில் இருந்தாலும் அந்த வீட்டில் வசிக்க அந்த பெண்ணுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 76 வயதான அஹுஜா என்பவர்
தனது மகன் மற்றும் மருமகளை தனது பெயரில் உள்ள வீட்டில் இருந்து காலி செய்யுமாறும் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.இதில் மேலும் படிக்கவும் :