வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (17:12 IST)

தண்ணீர் எடுக்கச் சென்ற தம்பதி கிணற்றில் விழுந்து பலி

மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் கூட தன்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் எடுக்க நெடுந்தூரம் சென்று கிணற்றிலிருந்து நீர் இறைத்து வருகிறார்கள்.


 

 
இந்நிலையில், யவத்மால் மாவட்டம் வட்காவ் அருகில் உள்ள தாண்டா எனும் கிராமத்தில் வசிக்கும் மாணிக் ஜாதவ்(40), அவரது மனைவி மேனகா(38) ஆகிய இருவரும் தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளனர்.
 
ஒரு கிணற்றில் மேனகா தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த போது, திடீரென கால் இடறி கிணற்றில் விழுந்து விட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவரும், மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால், நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
 
இதை அறிந்த வாட்காவ் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்கள் இருவரின் உடல்களையும், தீயணைப்பு படையினர் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.