லாலுவின் மனநிலை மோசம், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.. பாஜக
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து லாலு பிரசாத் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து அடுத்து லாலுவின் மனநிலை மிகவும் மோசமடைந்து விட்டது என்றும் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி யாத்திரை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையில் பீகார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் குறையை கேட்க போகிறார் என்றும் குறிப்பாக பெண்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் புறப்படுகிறது.
இந்த யாத்திரை குறித்து லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது பெண்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் நிதிஷ்குமார் யாத்திரை செய்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பீகார் மாநில துணை முதல்வர் இது குறித்து கூறிய போது லாலுவின் மனநிலை மோசம் அடைந்து விட்டது, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். அவரால் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து ஜனதா தளம் தனது கண்டனத்தில் பெண்களுக்கு எதிராக லாலுவின் கருத்தை மம்தா பானர்ஜியும் சோனியா காந்தியும் கண்டிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பெண்கள் லாலுவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.