செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By dinesh
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (16:56 IST)

உத்திரபிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்?

உத்திரபிரதேச தேர்தலில் அம்மாநில மக்களிடம் மிகவும் பிரபலமான பிரியங்கா காந்தியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துவிட்டது. பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.



விடுமுறையை கழித்த பின் இந்தியா திரும்ப உள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் பிறந்த ஷீலா, 1984ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் கன்னாவுஜ் தொகுதி  எம்பியாக வெற்றிபெற்றார். ஷீலாவின் கணவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அரசியலில் கவனம் செலுத்தி வந்த ஷீலா,  அம்மாநில முதல்வராக தொடர்ந்து 3 முறை பதவி வகித்துள்ளார்.  

இந்நிலையில்,  கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.