வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (11:01 IST)

'மோடி அழிவை உண்டாக்குபவர்' - பாஜக தலைவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது

நாடாளுமன்ற தேர்தலின் முதல் ஐந்துகட்ட வாக்குபதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் நேற்று பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை அழிவை உண்டாக்குபவர் என  விமர்சித்து  அக்கட்சியை சேர்ந்த உமாபாரதி பேசியிருக்கும் வீடியோ தான் அது. 
 
காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், மோடியை 'அழிவை உண்டாக்குபவர்' என்றும், மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சியடைந்தது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் உமாபாரதி பேசியுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ  பதிவான போது உமா பாரதி பாஜக - வில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் காங்கிரஸின் இந்த செயலுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ள உமாபாரதி, ஜோடிக்கப்பட்ட கற்பனையான வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதாக காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.