வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (13:07 IST)

ரூ 30 லட்சம் லஞ்சம் பெற்ற ஆம் ஆத்மி அமைச்சரின் உதவியாளர் [வீடியோ]

ரூ 30 லட்சம் லஞ்சம் பெற்ற ஆம் ஆத்மி அமைச்சரின் உதவியாளர் [வீடியோ]

ஆம் ஆத்மி அமைச்சர் இம்ரான் ஹுசைனின் உதவியாளர், ஹம்மத் வீட்டின் உரிமையாளரிடம் ரூ. 30 லட்சம் பெற்ற வீடியோ வெளியானதை அடுத்து அவரை பதவி விலக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
 

 
வட டெல்லி பகுதியான பல்லிமாறன் பகுதியில், முறைகேடான வகையில் கட்டிடம் கட்டுவதற்கு, பல்லிமாறன் தொகுதியின் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைனின் உதவியாளர் ஹம்மத் ரூ. 30 லட்சம் லஞ்சப்பணம் பெற்றது தெரியவந்துள்ளது.
 
இது குறித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் எடுக்கபட்ட ஒரு வீடியோ இன்று வெளியிட்டுள்ளார். மேலும், இம்ரான் ஹுசைன் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த வீடியோவில், டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற மந்திரி இம்ரான் பணம் செலவு செய்து இருந்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்படுகிறது என்று வீடியோவில் ஹமத் கூறுகிறார். 
 
இது குறித்து அஜய் மக்கான் கூறும்போது, “வீடியோவில் லஞ்சம் கேட்பவர் மந்திரி இம்ரான் ஹுசைனின் அலுவலக ஊழியர் ஹம்மத் தான். அவர்தான் மந்திரி சார்பில் கட்டிட உரிமையாளர் காசிமிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
 
கெஜ்ரிவால் ஊழலற்ற  ஆட்சி என்று கூறி வருகிறார். இது பொய்யானது. இதனால் இம்ரான் உசேன் மந்திரி பதவியில் உடனடியாக விலக வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை ‘அடிப்படை ஆதாரமில்லாதது’ என்று ஆம் ஆத்மி மறுத்துள்ளது.

வீடியோ கீழே: