ஆளுநர் அழைக்காவிடில் ராஜ்பவன் முன்பு தர்ணா போராட்டம் - காங், மஜத அறிவிப்பு

Last Modified புதன், 16 மே 2018 (15:41 IST)
கர்நாடகா விவகாரத்தில், போதுமான எம்.எல்.ஏக்கள்  இருந்தும் தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததால் நாளை தர்ணா போராட்டம் நடத்த  காங் - கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

 
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக,  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அந்த கூட்டணியில் 116 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதேசமயம், தனிக்கட்சியாக 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.     
 
ஆனாலும், இதுவரை மஜத கட்சியின் தலைவர் குமாரசாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. மேலும், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கக் கூடும் என செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த காங் மற்றும் மஜத தரப்பு, அப்படி நடந்தால் நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம் எனக்கூறியிருந்தது.
 
இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிடில் நாளை ராஜ்பவன் முன் தரணா போராட்டத்தும் நடத்த காங்-மஜத கூட்டணி முடிவெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :