வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2016 (17:32 IST)

துணிச்சல் இருந்தால் இதை செய்யுங்கள்! - சவால் விட்ட சிவசேனா

கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாய் அறிவித்தார்.


 

இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில மரண சம்பவங்கள் கூட ஏற்பட்டுள்ளது. அதேபோல், தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ”பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இருந்தால், இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே?” என்று காட்டமாக கேட்டுள்ளார்.

மேலும், மக்கள் உங்கள் (மோடி) மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்க வேண்டாம்; இல்லையேல் மக்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் தாக்கத்தை அனுபவிப்பீர்கள்” என்றும் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.