வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2015 (03:35 IST)

சுஷ்மா சுவராஜ் - வசுந்தரா ராஜே மீது பீகார் நீதி மன்றத்தில் வழக்கு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது, பாட்னா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்திய அரசால் தேடுப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி. ஐபிஎல் கிரிக்கெட்டில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்தார் என்பது இவர் மீது உள்ள குற்றச்சாட்டு. இதனால், இந்திய அரசு, தன்னை கைது செய்யும் என கருதி, தற்போது லண்டனில் பதுங்கி வாழ்ந்து வருகின்றார்.
 
இந்நிலையில், பீகாரின் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பில், பாட்னா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆனால், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரான வினய் குமார் சிங் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், இந்த வழக்கு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.