வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (05:31 IST)

கல்லூரி மாணவிகளின் போனை ஹேக் செய்து இந்த படுபாவி செய்த காரியம் என்ன தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவிகளின் போன் நம்பர்களை ஹேக் செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் அனுப்பியுள்ளான். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அந்த மாணவனை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர்.



 
 
போலீசாரின் விசாரணையில் அந்த மாணவர் பெயர் திப்டேஸ் சலேச்சா என்றும் ராஜஸ்தானை சேர்ந்த இந்த மாணவன், நாசிக்கில் படித்து வருவதாகவும் தெரிந்தது.
 
வாட்ஸ்-அப் பயனாளர்களின் கணக்கை உறுதி செய்வதற்காக அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டில் பதிவாகும் எண்களை இந்த மாணவன் ஹேக் செய்து பின்னர் அதில் மாணவிகளின் எண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு ஆபாச மெசேஜ், ஆபாச படங்கள் மற்றும் வீடியோ அனுப்பியுள்ளான். இதுகுறித்து மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திப்டேஸ் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட திப்டேஸ் சலேச்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் விசாரணைக்காக ஜூலை 7 வரை 
சிறையிலடைக்கப்பட்டார்.