வரலாற்றில் முதல்முறையாக ஆளுனர் அலுவலகம் முன் தர்ணா செய்யும் முதல்வர்

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (14:33 IST)
ஆளுனரும் முதல்வரும் கருத்து வேறுபாடு கொள்வது என்பது பல மாநிலங்களில் நடக்கும் நிகழ்வாக இருக்கும் என்பது தெரிந்ததே. தமிழகத்தில் கூட முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கவர்னராக இருந்த சென்னாரெட்டிக்கும் பல கருத்து மோதல்கள் இருந்தன
ஆனால் கவர்னரிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவருடைய மாளிகைக்கு முன் ஒரு முதல்வர் தர்ணா போராட்டம் நடத்தும் முதல் நிகழ்வு புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் கடந்த பல மாதங்களாக மோதல் இருந்து வரும் நிலையில் மாநில வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருப்பதாக கூறி முதலமைச்சர் நாராயணசாமி சற்றுமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்வருடன் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். முதல்வர் நாராயணசாமியும் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :