வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 15 டிசம்பர் 2014 (14:53 IST)

வாஜ்பாய் பிறந்தநாள் : மத்திய அரசு பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தா?

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபா தலைவர் மதன்மோகன் மல்வியா ஆகியோரின் பிறந்தநாளை ‘சிறந்த ஆளுமை’ தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் மத்திய அரசின் நவோதயா, கேந்த்ர வித்யாலயா பள்ளிகளில் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜக தலைவர்களின் பிறந்த நாளை சிறந்த ஆளுமை தினமாக கொண்டாடும் நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
25 ஆம் தேதி அன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு, 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டுரைப்போட்டி, வினா – விடை போட்டி, குறும்படங்கள் திரையிட்டு மாணவர்களுக்கு ஆளுமை தினம், பண்டிகளை பற்றி விளக்கி கூற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் மத்திய அரசு பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பள்ளி குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்ததாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் இது பற்றி மற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.