1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (22:52 IST)

இதுதான் ஏலியன் குழந்தையா? அதிர்ச்சியில் பெற்றோர்

ஹர்லிகுன் இச்தியோசிஸ் என்ற குறைபாடு காரணமாக வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த ஒரு குழந்தையை ஏலியன் குழந்தை என பீகார் மக்கள் நம்புவதால் அந்த குழந்தையை பார்க்க கூட்டம் குவிந்து வருகிறது

பீகாரில் உள்ள கதிகார் என்ற பகுதியில் கலிதா பேகம் என்ற 35 வயது பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை சின்ன தலை மற்றும் பெரிய கண்களுடன் உள்ளதால் குழந்தையை பார்த்த தாயார் கலிதா உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 


மேலும் குழந்தைக்கு அனென்ஸ்பலி (Anencephaly) எனும் நோயின் அறிகுறி இருப்பதாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை இருக்காது. குழந்தை பிறந்த பின்னர் கலிதா பேகம் தூக்குவதற்கே மறுத்துள்ளார். அங்குள்ள செவிலிகளிடம் தன் கண்ணில் படாமல் தூக்கிச்சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதன் பின்பு தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு குழந்தையை தூக்கியுள்ளார்.

ஆனால் அந்தப்பகுதி மக்கள் குழந்தை கடவுள் ஹனுமானின் அவதாரம் என்றும் இந்த குழந்தையை தெய்வம் போல் வழிபட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.