வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (19:49 IST)

'ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்’ - உச்ச நீதிமன்றம்

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம். இதற்கு முத்கல் குழு அறிக்கை மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6ஆவது ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற சூதாட்டப் புகார் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குறித்த தந்து 35 பக்க அறிக்கையை உச்ச நீதிமண்றத்தில் சமர்ப்பித்தது.

குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களில், வீரர்கள் அல்லாத 4 நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது செயல்பாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை மீதான விசாரணையில், ” அறிக்கையில் பி.சி.சி.ஐ. தரப்பில்,சென்னை அணி நிர்வாகிகளில் ஒருவர் தான் குருநாத் மெய்யப்பன், என முத்கல் குழு கூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். இவர் மறைமுகமாக செயல்பட்டு வந்துள்ளார். சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்தது யார்? சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியா சிமென்ட்ஸ் இயக்குனர்கள் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். சென்னை அணியை ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு முத்கல் குழு அறிக்கை மட்டுமே போதுமானது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், ‘முத்கல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை அணியை ஏன் நீக்க கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் டோனியின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.