1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:32 IST)

மிதிவண்டி பயன்படுத்துங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் அனைவரையும் மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது. அதன்படி முதற்கட்டமாக சென்னை ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையத்தில் மிதிவண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.


 

 
சென்னையில் தினந்தோறும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோ, ரயில் மற்றும் பேருந்து போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மெட்ரோ ரயில் நிலையம் சாலையின் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், மாசு ஏற்படுவதை குறைக்கவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 
அதாவது பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டமாகும். இதற்காக தற்போது ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆண்கள், பெண்கள் என தனி தனியே பயன்படுத்த 10 மிதிவண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இதை பயன்படுத்த் விரும்புவர்கள் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். பின்னர் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டணமின்றி பய்ன்படுத்தி கொள்ளலாம். மிதிவண்டி தேவை இல்லை என்றபோது வைப்புத் தொகையை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம்.