1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 27 மே 2015 (04:07 IST)

சென்னை எழும்பூர் - ஐதராபாத் இடையே சிறப்பு ரயில்

சென்னை- ஐதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- 
 
மே 31 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்(ரயில் எண் 06058) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். 
 
அதே போல, ஜூன் 1மற்றும் 8 ஆம் தேதிகளில் ஐதராபாத்  இருந்து சிறப்பு ரயில்(ரயில் எண் 06059) இரவு 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். 
 
இந்த சிறப்பு ரயில், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், காசியாப்பேட், ஜாங்கோன், செகந்திராபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை- ஐதராபாத் இடையே சிறப்பு ரயிலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.