வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:58 IST)

3 ஆண்டுகளில் கங்கையை சுத்தம் செய்ய மத்திய அரசு இலக்கு

கொடூரமாக மாசுபட்டுள்ள கங்கை நதியை சுத்தம் செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து செயல்பட்டு வரும் நிலையில், நதியை சுத்தம் செய்து புத்துயிரளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு 3 ஆண்டுகள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பித்தல் துறை அமைச்சர் உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாக்கடையால் மாசடைந்துள்ள கங்கையை 3 ஆண்டுகளில் சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மூன்று ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஓட்டத்தை நிறுவ உள்ளோம். 6 மாதங்களில் சுத்தம் செய்யும் திட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேபோல் டெல்லியில் பாயும் யமுனை நதியையும் சுத்தம் செய்வது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை சந்தித்து இதுபற்றி பேச உள்ளனர். 2015-16 ஆம் ஆண்டை தண்ணீர் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தயாராக இருக்கிறோம். 
 
இவ்வாறு உமாபாரதி கூறினார்.