வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2015 (01:20 IST)

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பெயரில் துணிகர மோசடி

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பெயரில் போலி சிபாரிசு கடிதம் கொடுத்து பணியில் சேர்ந்த நபர் மீது காவல்துறையில் புகார் கொடுக்க தனியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
 

 
உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தில் ஐ.எப்.டி.எம். என்ற தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த, மூன்று பேராசிரியர்கள், போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் உடனே, சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவரை, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கையெழுத்திட்ட சிபாரிசு கடிதம், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளார்.
 
இந்த கடிதம் குறித்து, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அலுவலகத்தில் விசாரித்த போது, அந்தக் கடிதம் போலியானது என தெரிய வந்தது. போலி சிபாரிசு கடிதம் கொடுத்த நபர் மீது,  ஐ.எப்.டி.எம். தனியார் பல்கலைக்கழகம் காவல்துறையில் புகார் செய்ய முடிவு செய்துள்ளது.