திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (11:39 IST)

வோடோபோன் ஐடியா பங்குகளை வாங்குகிறாரா எலான் மஸ்க்.. பரபரப்பு தகவல்..!

மத்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை 32 சதவீதம் வைத்துள்ள நிலையில் அந்த பங்குகளை எலான் மஸ்க் வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான  ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மூன்றாவது இடத்தில் வோடபோன் ஐடியா இருந்தாலும் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் 
 
இந்த நிலையில் வோடோபோன் ஐடியா நிறுவனத்தில் இந்திய அரசு 32.59 சதவீத பங்குகளை வைத்துள்ளதாகவும் இந்த பங்குகளை மத்திய அரசு எலான் மஸ்க் அவர்களின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வோடோபோன் நிறுவனம் 31.27% பங்குகளையும் ஆதித்யபிர்லா நிறுவனம் 17.49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். இந்நிலையில் எலான் மஸ்க் வோடோபோன் பங்குகளை வாங்கினால் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran