1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (17:51 IST)

தமிழகத்தில் 12 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க பரிந்துரை

கடந்த சில மதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்தர மோடி ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்க்கான திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரைகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்  வெங்கைய்ய நாயுடு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். தமிழகத்தில்,12 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 98 நகரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான நகரங்கள் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தையை சேர்ந்தவைகள். இந்த பட்டியலில் உ.த்தர பிரதேசத்தில் 13 நகரங்களும், தமிழகத்தில் 12 நகரங்களும், மகாராஷ்டிராவில் 10 நகரங்களும், மத்திய பிரதேசத்தில் 7 நகரங்களும், பீகார் மற்றும் ஆந்திராவில் முறையே 3 நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் 98 நகரங்களில் 24 நகரங்கள் மாநிலங்களின் தலைநகரம் ஆகும்.

வெளியிட்ட பட்டியலில் தமிழகத்தில் மதுரை, கோவை, சென்னை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்களின் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என  அமைச்சர் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நகரங்கள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் வெங்கைய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.