வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (08:46 IST)

இனிமேல் காஷ்மீரில் எல்லாரும் நிலம் வாங்கலாம்! – மத்திய அரசு சட்ட திருத்தம்!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் நிலம் வாங்க சட்ட திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு நீக்கிய மத்திய அரசு அதை இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைத்தது. அதை தொடர்ந்து காஷ்மீர் தலைவர்கள் பலர் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக போராடிய நிலையில் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 144 அமல்படுத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. சிறப்பு அந்தஸ்து அமலில் இருந்தபோது காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.