வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (10:52 IST)

செல்லாத ரூபாய் நோட்டு: ரூ.50,000 வரை அபராதம்; மத்திய அரசு அதிரடி!

டிசம்பர் 30ம் தேதிக்குப் பின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 
 
இதன்படி, 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளை, 10க்கும் மேலாக வைத்திருப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும் என ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில், செலுத்தி மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, தற்போது மக்கள் அனைவரும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். 
 
எனினும், செல்லாத ரூபாய் பணத்தை, 10 நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும், பணப்பதுக்கலை தடுக்கவும் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடுகின்றன.