வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (22:27 IST)

கோல் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.591 கோடி அபராதம்: அதிர்ச்சி தகவல்

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு, ரூ.591 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





நிறுவனங்களின் போட்டிகளை கண்காணிக்கும் ஆணையமான CCI எனப்படும் அமைப்பு இந்த அபராதத்தை கோல் இந்தியா நிறுவனத்திற்கு விதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ததில் விதிமீறல்கள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமீறல்களை  கோல் இந்தியா ஈடுபட்டது ஆதாரபூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளதாலும் இந்த அபராதம் விதித்துள்ளதாகவும் நிறுவனப் போட்டிகள் கண்காணிப்பு ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த நிறுவனத்திற்கு இதே குற்றச்சாட்டு காரணமாக ரூ.1773 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த அபராதத்தை எதிர்த்து, கோல் இந்தியா நிறுவனம், நிறுவனப் போட்டிகள் சமரச தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. கோல் இந்தியா மீது புதியதாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க, அதில் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது மீண்டும் ரூ.591 கோடி அபராதம் விதித்து, நிறுவனப் போட்டிகள் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது