செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (16:14 IST)

தெலுங்கானாவிற்கு மிரட்டல்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு மீது வழக்குப் பதிவு

தெலங்கானா அரசை மிரட்டியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ஐதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
வழக்கறிஞர் பனிந்த்ர பார்கவ் தாக்கல் செய்த மனுவில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில், ஒட்டுக்கு பணம் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டால், அன்றைய தினமே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசின் கடைசி நாள் என மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும் சந்திரபாபு நாயுடுவும், அவரது அமைச்சர்களும், ஆந்திர மாநில மக்களை தெலங்கானா மாநில மக்களுக்கு எதிராக தூண்டிவிடுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில், சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் 5 பேர் மீதும், தேசத் துரோகம், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் மத்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு உள்ளது. இது தவிர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெலிபோனில் பேசியதாக கூறிய செல்போன் ஆடியோ ஆதாரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து கேட்டு பெற்று உள்ளது.